உடலுறவில் ஈடுபட்ட பின் இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

உடலுறவு என்பது ஓர் கலை என்றுதான் நம் முன்னோர்கள் பட்டியலிட்டனர்.

அதிலும் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று வகைப்படுத்தியுள்ளனர்.அவ்வாறு செய்தல் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

முதலில் உடலுறவில் ஈடுபடும் முன் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது,மது அருந்தக்கூடாது, கசப்பான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதைப்போல உடலுறவுக்குப்பின் செய்யக்கூடாதவைகளை இங்கேய கூறியுள்ளோம் .

முக்கியமாக உடலுறவுக்குப்பின்  உடனே தூங்கிவிடக்கூடாது. உடலுறவுக்கு முன் குளிப்பது நல்லது. ஆனால் உடலுறவுக்குப்பின் குளிக்கச்செல்வதோ அல்லது பிறப்புறுப்பை கழுவுவதோ தவறு.குறிப்பாக கருதரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை செய்ய வேண்டாம். உடலுறவில் ஈடுபட்டு சிலநேரம் கழித்து இதனை மேற்கொண்டால் நல்லது.

உடலுறவு முடித்த பின்னர் எதோ ஒரு வேலை  முடிந்தாற்போல் உடனே உங்கள் நண்பருக்கோ அல்லது தோழிக்கோ  போன் செய்வது நல்லதாக இருக்காது.

உடலுறவில் பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு உடனே உறங்கிவிடுவது தான். இந்தத் தவறை செய்வது ஆண்கள்தான்.பொதுவாக பெண்களுக்கு உடலுறவு முடிந்த பின்புதான் அதிகமாக ஆண்களின் துணியை தேடுவார்கள்.அதனால் உடலுறவு முடிந்த பின் கொஞ்சுவது ,பேசுவது என இருக்க வேண்டும்.

உடலுறவு முடிந்த பின்பு தனியாக தூங்குவது தவறு.மற்றும் அலுவலக வேலை பார்ப்பதும் தவறு.இது உங்கள் இல்லற வாழ்வை சீர்குலைக்கும்.

தாம்பத்திய வாழ்வு சிறக்க இதை பின்பற்றுங்கள்..!

நம் மக்கள்  பெரும்பாலும் வெளியே பேச கூச்சப்படும் விஷயம் தாம்பத்தியம் . எங்கே இதற்கு  சந்தேகம் கேட்டால் தவறாக நினைப்பார்களோ , அல்லது இதுக்கூட தெரியாதா என கேலி செய்வார்களோ என தாம்பத்தியம் குறித்த சந்தேகங்களுக்கு சரியான தீர்வு என்ன என்பதை அறியாமலேயே விட்டுவிடுகின்றனர்.

உடலுறவில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் உறவில் விரிசல் ஏற்படவும், சிலவகையான நோய் தொற்றுகள் உண்டாகவும் கூட காரணியாக இருக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் சந்தேகங்களை மருத்துவர்களிடமே நேரடியாக கேட்டு தெளிவு பெறுவது நல்லது.

Image result for தாம்பத்திய

புதுமை :

தாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரி முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, புதுப்புது விஷயங்களை கையாளுதல் போன்றவை உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்.

தம்பதிகள் மத்தியில், முதலில் நாம் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் உண்டாகலாம். சிலரது மத்தியில் கணவன் ,மனைவி தான் எப்போதுமே முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இதற்காக வெட்க பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருசிலருக்கு கூச்ச சுபாவமாக இருக்கலாம். ஆதலால், நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தாம்பத்தியம் மேலோங்க உதவுமே தவிர, தவறாக வாய்ப்பில்லை.

Image result for தாம்பத்திய

உறக்கம் :

தம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டியது கட்டாயம் என உடலுறவு சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நிறைய பேசிக்கொள்ள முடியும், அன்யோன்யம் பெருகும்

ஆர்வம் ஏற்படும் போது மட்டும் உடலுறவில் ஈடுபடுங்கள். துணை விருப்பமாக இருக்கிறார் என ஆர்வம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது, தாம்பத்தியத்தின் மீதான ஆசையை குறைக்கும். மேலும், விரக்தியாக உணர வைக்கும்.

Image result for தாம்பத்திய

ரகசியம் :

உங்கள் இருவருக்குள்ளும் எந்த ரகசியத்தையும் மறைத்து வைக்க வேண்டாம். மனதளவில் குழப்பம், சந்தேகம், பிரிவு ஏற்பட்டால் அது கண்டிப்பாக உடலுறவை பாதிக்கும்.

நிர்வாணமாக உறங்குவது மன ரீதியான இறுக்கத்தை, இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

Image result for தாம்பத்திய

சந்தேகம் :

உடலுறவு சார்ந்த சந்தேகங்கள், அல்லது உடலுறவு பற்றி பேசுவதை தவறாக நினைக்க வேண்டாம். உடலுறவு என்பது தம்பதி இருவர் மத்தியிலான அந்தரங்க சமாச்சாரம். உங்கள் இருவர் மத்தியிலான ஒன்றை நீங்களாக பேசி தெளிவு பெறுவது நல்லது.Related image

 

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்..! ஒரு பார்வை..!

 • சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்கள்: பிர்லா கோளரங்கம், அமீர் மகால், அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா பொது நூலகம், எலியட்ஸ் கடற்கரை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னைப் பல்கலைக் கழகம், கலா சேத்ரா, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா – வண்டலூர், முட்டுக்காடு படகுக்குழாம், சென்னைச் சங்கமம், சென்னை அறிவியல் விழா, அரசு அருங்காட்சியகம் சென்னை
 • மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்கள்: மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, இராஜாஜி பூங்கா, அரசு அருங்காட்சியகம்.
 • தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் மகாமகம் திருநாள், இராஜராஜன் மணி மண்டபம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை ஓவியங்கள், தஞ்சாவூர் அரண்மனை, கும்பகோணம், தமிழ்ப் பல்கலைக் கழகம்.
 • நீலகிரி: அவலஞ்சி, தாவரவியல் பூங்கா, கெய்ரன் ஹில்ஸ், தொட்டபெட்டா, கிளமார்கள், கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி, உதகை ஏரி படகு இல்லம், வெஸ்ட்டர்ன் கேட்ச்மென்ட், லேடி கானிங் சீட், முக்குர்தி நேஷனல் பார்க்.
 • கொடைக்கானல் : கரடிச் சோலை அருவி, பேரிஜம் ஏரிக்காட்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, டால்மென் வட்டம், கோக்கர்ஸ் வாக், ஃபேரி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, கால்ஃப் கிளப், கூக்கால் குகைகள், குறிஞ்சியாண்டவர் கோயில்

Related imageஇரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை

 • கன்னியாகுமரி: காந்தி நினைவாலயம், அரசு அருங்காட்சியகம், முட்டம், பத்மநாபபுரம் அரண்மனை, சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம், உதயகிரிக் கோட்டை
 • கோவை : ஆனைமலை விலங்குகள் சரணாலயம், மருதமலைக் கோயில், பொள்ளாச்சி, பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு, டாப்ஸ்லிப், ஜி.டி. நாயுடு தொழில்துறைக் கண்காட்சி.
 • இராமேஸ்வரம் : இராமநாத சுவாமி கோயில், கடல் மீன் காட்சியகம், தனுஷ்கோடி
 • ஏற்காடு : தாவரவியல் பூங்கா, படகு குழாம், பகோடா பாயிண்ட், லேடிஸ் சீட், சேர்வராயன் காவேரியம்மன் கோயில்
 • காரைக்குடி செட்டி நாடு மாளிகை, பிள்ளையார்பட்டி
 • குற்றாலம் அருவிகள் : பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி.
 • ஒகேனக்கல் : ஒகேனக்கல் அருவி
 • சிறுவாணி நீர் வீழ்ச்சி
 • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
 • அணைகள்: மேட்டூர், பரம்பிக்குளம் – ஆழியார், சிறுவானி அணை, பில்லூர் அணை
 • தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்)
 • வனவியல் கல்லூரி அருங்காட்சியகம்.

Image result for தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்..! ஒரு பார்வை..!தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

 1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா [டாப்ஸ்லிப்],பொள்ளாச்சி
 2. முதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி
 3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
 4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
 5. கிண்டி தேசியப் பூங்கா
 6. ஆனைமலை வன விலங்குகள் சரணாலயம்.

Image result for தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்..! ஒரு பார்வை..!நீர்விழ்ச்சி :

குற்றாலம்

Image result for தமிழ்நாட்டில் குற்றாலம்குற்றாலம் மெயின் அருவியின் தோற்றம் , இது தெற்கு ஆசியாவின் ‘ஸ்பா’ என்றழைக்கப்படுகிறது

குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 167அடியில் அமைந்திருக்கிறது. இங்கு ஒன்பதுக்கும் மேற்ப்பட்ட அருவிகள் உள்ளது.

ஒகேனக்கல் நீர்விழ்ச்சி :

ஒகேனக்கல் அருவிஆசியாவின் நயாகரா அருவிஎன்றழைக்கப்படுகிறது

ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லைக்கருகே உள்ளது.

கேத்தரீன் நீர்விழ்ச்சி :

டால்பின் மூக்கிலிருந்து, குன்னூர் அருகிலுள்ள கேத்தரீன் நீர்விழ்ச்சியின் தோற்றம்

இது நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் அமைந்திருக்கிறது.

சுருளி நீர்விழ்ச்சி :

Image result for சுருளி நீர்விழ்ச்சிசுருளி அருவி தேனி மாவட்டத்தில் மேகமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.

திற்பரப்பு நீர்விழ்ச்சி :

திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

கிள்ளியூர் நீர்விழ்ச்சி :

இது கிழக்கு மலைத்தொடரிலுள்ள சேர்வராயன் மலையில் ஏற்காட்டில் அமைந்திருக்கிறது.

 

தமிழ்நாட்டில் சுற்றுலா இடங்கள்..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40 550 382 சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் 39214721 உள்ளூர் பயணிகள் 1335661 வெளியூர் பயணிகள்.

Image result for சுற்றுலா (tourism) என்றால் என்ன..?பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.

Image result for சுற்றுலா (tourism) என்றால் என்ன..?தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும்.

உலகப் பாரம்பரியக் களங்கள் – தமிழ்நாடு :

நீலகிரி மலை இரயில்

தமிழ்நாட்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரியக் களங்கள் உண்டு. மூன்று சோழர் கோயில்களையும் ஒரு தொகுதியாக வகைப்படுத்தப்படுவதுண்டு.

 • மாமல்லபுரம்
 • அழியாத சோழர் பெருங்கோயில்கள்
 • தஞ்சைப் பெருவுடையார் கோயில்
 • கங்கைகொண்ட சோழபுரம்
 • ஐராவதேஸ்வரர் கோயில்
 • நீலகிரி மலை இரயில் பாதை

 

சுற்றுலா (tourism) என்றால் என்ன..?

சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது “வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது”.

Image result for சுற்றுலா (tourism)உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை. 2010-இல், 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2009-ஐக் காட்டிலும் 6.6% வளர்ச்சியினை காட்டுகிறது. 2010-இல் உலக சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர் வரவை எட்டியுள்ளது. 2009-இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக உலக சுற்றுலாத்துறை 2008-இன் இரண்டாம் பாதியிலிருந்து 2009-ஆம் ஆண்டின் இறுதிவரை சரிவைக் கண்டது. 2009-இல் உலகை உலுக்கிய பறவைக் காய்ச்சல் சர்வதேச சுற்றுபயணிகளின் வருகையை 2009-ஐக் காட்டிலும் 4.2% குறைத்தது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக விளங்குகிறது. சுற்றுலாத்துறை போக்குவரத்து உணவுத்துறை, இடவசதி, ஒய்வு மற்றும் கேளிக்கை மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்துள்ளது.

Image result for சுற்றுலா (tourism)தமிழர் பயண வரலாறு :

போக்குவரத்து, தொலைதொடர்பு, விருந்தோம்பல் துறைகள் பழங்காலத்தில் விரிபு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்வை வாழ்ந்தனர். இருப்பினும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் பிற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு பெற்றனர். சோழ மன்னர்கள் இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் படையெடுத்த போது பலர் அங்கு சென்றனர். குறிப்பிடத்தக்கோர் அங்கேயே இருந்துவிட்டனர். தமிழ் வணிகர்கள் பல இடங்களுக்கு பழங்காலம் முதலே சென்று வந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளில் கிடைக்கிறது. சமய தலங்களை வணங்குவதற்கும், தமது சமயத்தைப் பரப்புவதற்கும் தமிழர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

வணிக விருந்தோம்பல் விரிபு பெற முன்னர் உணவுக்காவும், உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணர்கள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது.

செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பல வற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உலகச் சுற்றுலாப் புள்ளிவிபரங்கள் :

உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கைகேற்ப முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.

தரவரிசை நாடு உலக
சுற்றுலாத்துறைப்
பிரதேசம்
சர்வதேச
சுற்றுலா பயணிகளின்
வருகைகள்
(2012)
சர்வதேச
சுற்றுலா பயணிகளின்
வருகைகள்
(2011)
மாற்றம்
(2011 முதல்
2012வரை)
மாற்றம்
(2010 முதல்
2011வரை)
1  பிரான்ஸ் ஐரோப்பா 83.0 மில்லியன் 81.6 மில்லியன் +1.8% +5.0%
2  அமெரிக்கா வட அமெரிக்கா 67.0 மில்லியன் 62.7 மில்லியன் +6.8% +4.9%
3  சீனா ஆசியா 57.7 மில்லியன் 57.6 மில்லியன் +0.3% +3.4%
4  எசுப்பானியா ஐரோப்பா 57.7 மில்லியன் 56.2 மில்லியன் +2.7% +6.6%
5  இத்தாலி ஐரோப்பா 46.4 மில்லியன் 46.1 மில்லியன் +0.5% +5.7%
6  துருக்கி ஐரோப்பா 35.7 மில்லியன் 34.7 மில்லியன் +3.0% +10.5%
7  செருமனி ஐரோப்பா 30.4 மில்லியன் 28.4 மில்லியன் +7.3% +5.5%
8  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா 29.3 மில்லியன் 29.3 மில்லியன் -0.1% +3.6%
9  உருசியா ஐரோப்பா 25.7 மில்லியன் 22.7 மில்லியன் +13.4% +11.9%
10  மலேசியா ஆசியா 25.0 மில்லியன் 24.7 மில்லியன் +1.3% +0.6%

சத்தான தினை ஆப்பம் செய்து பாருங்கள்..!

Image result for தினை ஆப்பம்தேவையான பொருட்கள் :

 • தினை – 2 கப்
 • இட்லி அரிசி – கால் கப்
 • வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
 • வெந்தயம் – 1 ஸ்பூன்
 • தேங்காய்ப் பூ – 1/2 கப்
 • வடித்த சாதம் – ஒரு கைப்பிடி
 • உப்பு – தேவைக்கு
 • சர்க்கரை – 2 ஸ்பூன்
 • கஞ்சி காய்ச்ச :
 • பச்சரிசி – 2 ஸ்பூன் (தனியே ஊற வைக்கவும்)

 

Image result for தினை ஆப்பம்செய்முறை: 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

தனியே ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியின் சிறிய ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

Image result for தினை ஆப்பம்அத்துடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். (கிளறுவதை நிறுத்தி விட்டால் கட்டி தட்ட ஆரம்பிக்கும்)
சிறிது நேரத்தில் சூடேறியதும் மாவு பசை போன்ற பதத்திற்கு இறுக தொடங்கும். அப்போது அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
சூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து விடவும். உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.

மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

தேவையான மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.
முக்கிய குறிப்புகள் : 

கஞ்சி காய்ச்சி சேர்ப்பதினால் ஆப்பம் சோடா சேர்க்காமலே மெதுவாக வரும்.

சோடா சேர்க்காததால் ஆப்பம் வேக கொஞ்சம் நேரம் எடுக்கும்.

சர்க்கரை சேர்ப்பதால் ஆப்பத்தின் ஓரம் பழுப்பு நிறத்தில் மாறுவதுடன் மொறுமொறுப்பாகவும்  இருக்கும்.

‘வெற்றி’ உங்களைத் தேடிவர இதைப்பண்ணுங்கள்..!

வெறும் உயர்ந்த குறிக்கோளை வைத்து மட்டுமே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? அது தவறு, உயர்ந்த குறிக்கோள் மட்டும் ஒருவனை வெற்றிக்கு கொண்டு செல்லாது. அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். Image result for 'வெற்றி'

 1. நீங்கள் , உங்கள் பக்கத்து வீட்டு நண்பர் முதல் பக்கத்துத் தெரு கடைக்காரர் ,நண்பர் வரை அனைவரிடமும் ஒரு நல்ல தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களிடமிருந்து  உதவிகள் கிடைப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.

2. உங்கள் பலமும் பலவீனமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும்,             உங்களுடைய பெஸ்ட்டை எப்போதுமே கொடுங்கள்.

 • திட்டமிட்டு செய்யுங்கள் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தையும் .
 • ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் அன்று இரவு ஒரு புத்தகத்திலோ அல்லது நமது நினைவில் கொண்டுவாருங்கள்.
 • எதையும் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில் எவ்ளோ பெரிய பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்தாலும் உங்கள் துணிச்சல்தான் உங்கள் வெற்றிக்கு ஆணிவேர்.
 • எந்தப் பணியிலும் உங்கள் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்களுடைய பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. கூடவே, நிறைய சவால்களும் காத்திருக்கும். இந்த சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

Image result for 'வெற்றி'நீங்கள் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும்.அதை சரியாக செய்யுங்கள்.

உங்களுடைய பணிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவேளை விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவேளையையும் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். இடைவேளைக்கப்புறம் சுறுசுறுப்பாகப் பணிகளைத் தொடர வேண்டும்.

அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள், தாமதமாக எழுந்ததாக சரித்திரம் கிடையாது.

நல்ல நல்ல விஷயங்களை புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலை, அறிவியல், இலக்கியம், உணவு என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் தோளைத் தொற்றிக் கொள்ளும்.

Image result for 'வெற்றி'புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். புதிய ஊரும், அங்குள்ள கலாச்சாரமும், அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறையும் உங்களையும் உங்கள் மனத்தையும் சுறுசுறுப்பாக மாற்றும். உங்கள் வெற்றிக்கும் வழி வகுக்கும்.

வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!

ஒரு வெற்றிகரமான மனிதன், தன் வாழ்க்கையில் நிறையத் தியாகங்களைக் கண்டிப்பாகச் செய்திருப்பான். எனவே, எதையும் விட்டுக் கொடுப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள். வெற்றிக் கனிகளை நீங்கள் சுவைக்கலாம்!

நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்.

 

காலை உணவை தவிர்த்தால் வரும் பிரச்சனைகள்..!

நேரமின்மையால் காலை உணவை பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை.  காலை உணவை ஒரு இளவரசன்  போல சாப்பிட வேண்டும், மதிய உணவை ஒரு மந்திரியை போல சாப்பிட வேண்டும் மற்றும் இரவு உணவை பிச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும் என்று கூறுவதை கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது கட்டாயம். தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன.

Image result for காலை உணவுகாலை உணவை தவிர்ப்பதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்யில் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை வியாதி உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்பட்டு விடுகிறது நீங்கள் காலை உணவை தவிர்க்கும் போது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் உங்களின் உடல் பருமன் அதிகரிக்கிறது.

Image result for காலை உணவுகாலை உணவை தொடர்ந்து புறகணித்து வருபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

காலை உணவை தவிர்த்தால் மூளை செயல்பாடு குறையும்.ஒரு நாள் உழைக்க தேவையான எனர்ஜி மற்றும் செல்களுக்கு தேவையான சத்துக்கள் காலை உணவிலிருந்தே பெறப்படுகின்றன.காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

கொத்து பரோட்டா : செய்து பாருங்கள்..!

தூத்துக்குடி பரோட்டா கொத்து பரோட்டாவிற்கு என்று தனியாக ஒரு கூட்டம் உண்டு , பாடர் பரோட்டா, முட்டை மசால் பரோட்டோ, விருதுநகர் பரோட்டா, முனியாண்டி விலாஸ் பரோட்டா என ஏகப்பட்ட வெரைட்டிகள் சொல்லிக் கொண்டே போகலாம். துண்டுகளாக்கப்பட்ட பரோட்டா உடன் மசாலா, முட்டை  சேர்த்து தயாரிப்பது கொத்து பரோட்டா. அந்த மசாலா என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம். முட்டை தொடங்கி சிக்கன், மட்டன், வாத்துக்கறி, காடை என உங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சேர்த்து பரோட்டா மாஸ்டர்கள் அவர்களில் ஸ்டைலில் வாழை இலையில் பரிமாறுவார்கள்.

Image result for முட்டை கொத்து பரோட்டாகொத்து பரோட்டா இண்ட்ரோ ஆனது முதலில் மதுரையில் தான். மைதா மாவு உருட்டி, பிசைந்து, தேய்த்து, ரொட்டி போல சுட்டு எடுத்து, முட்டை, அல்லது கறித்துண்டுகளை சேர்த்து, மசாலாப்பொருட்கள், சால்னா எனப்படும் குழம்பு ,கிரேவி  சேர்த்து கொத்தி எடுத்தால் கொத்து பரோட்டா தயார். பரோட்டா பிரியர்கள் பலருக்கும் இறைச்சி சேர்க்கும் கொத்து பரோட்ரோவை விட முட்டை கொத்து பரோட்டா தான் கொள்ளை பிரியம்.

Image result for முட்டை கொத்து பரோட்டாமுட்டை கொத்து பரோட்டா:

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு
2. வெங்காயம்
3. பச்சை மிளகாய்
4.தக்காளி
5.மஞ்சள்தூள்
6.கருவேப்பிலை
7.கரம் மசாலா
8.தனியா தூள்
9.சீரகத்தூள்
10.மிளகாய்த்தூள்
12.மட்டன் அல்லது சிக்கன் குழம்பு
13.எண்ணெய்
14. முட்டை

Image result for முட்டை கொத்து பரோட்டாசெய்முறை:

1. முதலில் மைதா மாவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, அதை வட்டமாக தட்டி பரொட்டோ போல் சுட்டு எடுக்க வேண்டும்.

2. பின்பு, தவாவில் எண்ணெய் ஊற்றி அதில், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,மிளகுத்தூள், தனியா தூள், சீரகத்தூள், தக்காளியைச் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.

4. இப்போது பரோட்டோவை எடுத்து தனித்தனியாக பிய்த்து கொண்டு அதில் சேர்க்க வேண்டும்.

5. அதனுடன், மட்டன்குழம்பு அல்லது சிக்கன் சால்னாவை ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.

6. பின்பு, தேவையான முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும். இறுதியில் இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்தவும்.

7. அதன் மேல் எண்ணெய்யை தூவி பதமாக கொத்தி, இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுடச்சுட கொத்து பரோட்டா தயார்.

இரவு நேரத்தில் இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்..!

இரவு நேரத்தில், நமது உடல் உறுப்புகள் அதன் வேலையை சரியாக செய்யவேண்டும் என்றால் இதை பாலோ பண்ணுங்கள்.

சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை சுத்தமாக  ஒதுக்க வேண்டும். ஏனெனில் காலையிலும் மதியமும் சாப்பிட்டு விட்டு வேலை செய்வதால் அந்த உணவு விரைவில் ஜீரணமாகி விடுகிறது. ஆனால் இரவு உணவு சாப்பிட்டு விட்டு நம் யாரும் வேலை செய்யப்போவது இல்லை. ஓய்வு எடுக்கதானே செல்கிறோம் என்று மிகக் குறைந்த அளவிலான உணவோ அல்லது சாப்பிடாமலோ தூங்கினால் உடல் எடை குறையும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்து வருகிறது.

இரவு நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, சாப்பிடலாம் என்பது குறித்து சில சிந்தனைகள் இருக்கும். சிலர் எடையைக் குறைப்பதற்கு இரவு நேரத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். ஆனால் இப்படி பட்டினி கிடப்பதால் மட்டும் உடல் எடையைக் குறைத்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். இரவு நேரத்தில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை மட்டுமே.. இது ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.Image result for இரவு நேரத்தில் உணவுகள்

1. இரவு நேரங்களில் இனிப்பான உணவுகளை ஒதுக்க வேண்டும். இரவு நேரத்தில்  ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம்.

2. எந்தவகையான கீரையையையும்  இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது.  இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

3. முழு சாப்பாடு, வயிறு முட்ட சாப்பிடுவது , அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் Image result for இரவு நேரத்தில் உணவுகள்

4. இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே,  இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. வாய்வுத்தொல்லை உருவாகும்.

5.  இரவு எட்டு மணிக்கு மேல் சாப்பிடுவதையும் , இரவு  ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.Image result for இரவு நேரத்தில் உணவுகள்

6. இரவில்  பாஸ்ட் ஃ புட்  உணவுகள் அதாவது , நூடூல்ஸ்,  மேகி போன்ற துரித உணவுகளை  கண்டிப்பாக இரவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

7.  40 வயதிற்கு மேற்பட்டோர் இரவில் மட்டன், கறிகள் கொழுப்பு உணவுகள்  எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.Image result for இரவு நேரத்தில் உணவுகள்