கிஸ், ரொமான்ஸ் எல்லாம் வெளியே செய்யாதீர்கள்..!காரணம் இதோ..!!

காமெடி நடிகர் விவேக் ஒரு படத்தில்  நம்ம ஊருல பொது இடத்துல கிஸ் அடிக்க முடியாது ஆனா, பிஸ் அடிக்கலாம். ஆனா, இங்க பொது இடத்துல பிஸ் அடிக்க கூடாது, ஆனா, கிஸ் அடிச்சுக்கலாம்ன்னு காமெடி வசனம் பேசியிருப்பார்  என்ன தான் இருந்தாலும் கலாச்சாரம்ன்னு ஒன்னு இருக்குல.

பொது இடத்தில் கிஸ் பண்ணுவது  ரொமான்ஸ், காதல் என்கிற பெயரில் மற்றவர்கள்  கண்ணு கூசுற மாதிரி நடந்துக்குறதும் தப்பு தான், அநாகரீகம் தான்.Image result for kiss,romance

  1. பொது இடத்தில் இருந்துக்கிட்டு கிஸ் பண்ணிக்கிறது, கொஞ்சுக்கிறது, ரொமான்ஸ் பண்றது எல்லாம் சரியானது இல்ல. ரொமான்ஸ் பண்றதுக்குன்னே சில இடங்கள் இருக்கு அங்க போலாம் பண்ணலாம். நூறு பேரு வந்து போற ரோட்டுல, பஸ் ஸ்டாப்ல, பார்க்ல, பீச்சுல ரொமான்ஸ் தேவையானது இல்ல.
  2. பிட்சா, பிரியாணியை வாழ்க்கையில் பார்த்திடாத மாதிரி , அதுக்காக ஏங்கி கிடக்கிற மக்கள் முன்னாடி நீங்கள் தவறு செய்யலாமா? .. அப்படி அது அவசியமா.. ? புரியல… ஊரு உலகத்துல காலாகாலமாக சிங்கிளா வாழ்ற ஜீவன்கள் எவ்வளவோ இருக்கு அவங்க மனசு புன்படுற மாதிரி பொது இடத்துல நின்னு தான் ரொமான்ஸ் பண்ணனுமா?Image result for kiss,romance
  3. என் லவ்வர் என் இஷ்டம்ன்னு பொது இடத்தில்  இருந்துகொண்டு ரொமான்ஸ் பண்றாங்கன்னு வெச்சுப்போம். காலம் முன்ன மாதிரி இல்லை … பாத்ரூம்குள்ளே கேமரா வெச்சு ரெகார்ட் பண்றாங்க… ரோட்ல ரொமான்ஸ் பண்ணா ரெகார்ட் பண்ண மாட்டாங்களா? நிச்சயம் பண்ணுவாங்க. பிறகு உங்கள் படத்தை  இன்டர்நெட் முழுக்க பார்ப்பாங்க. நீங்க வாட்ஸ்-அப்ல ஃபார்வேர்ட் பண்ணது போக, உங்களுக்கு உங்க வீடியோ வாட்ஸ்-அப்ல ஃபார்வேர்ட் ஆகி வரும்.Related image
  4. ஏதேனும் கருத்து வேறுபாடு, பிரச்சனை வந்து காதல் பிரச்சனை வந்தால்… அடுத்து வேற யாரையாவது லவ்வோ, கல்யாணமோ பண்ணிக்கிட்டா… அந்த ஜோடி / துணை கூட ரோட்டுல சும்மா போனாலும் கூட… அட இவன் / இவள் அன்னிக்கி அவன்கூட / அவள் கூட சுத்திட்டு இருந்தாலேன்னு ஒரு பக்கம் நாலு பேரு பேசுவாங்க. இன்னொன்னு.. தேவை இல்லாம நம்ம துணைக்கும் கெட்ட பேரு வரும்.
    Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *