சத்தான தினை ஆப்பம் செய்து பாருங்கள்..!

Image result for தினை ஆப்பம்தேவையான பொருட்கள் :

  • தினை – 2 கப்
  • இட்லி அரிசி – கால் கப்
  • வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • தேங்காய்ப் பூ – 1/2 கப்
  • வடித்த சாதம் – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவைக்கு
  • சர்க்கரை – 2 ஸ்பூன்
  • கஞ்சி காய்ச்ச :
  • பச்சரிசி – 2 ஸ்பூன் (தனியே ஊற வைக்கவும்)

 

Image result for தினை ஆப்பம்செய்முறை: 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

தனியே ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியின் சிறிய ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

Image result for தினை ஆப்பம்அத்துடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். (கிளறுவதை நிறுத்தி விட்டால் கட்டி தட்ட ஆரம்பிக்கும்)
சிறிது நேரத்தில் சூடேறியதும் மாவு பசை போன்ற பதத்திற்கு இறுக தொடங்கும். அப்போது அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
சூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து விடவும். உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.

மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

தேவையான மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.
முக்கிய குறிப்புகள் : 

கஞ்சி காய்ச்சி சேர்ப்பதினால் ஆப்பம் சோடா சேர்க்காமலே மெதுவாக வரும்.

சோடா சேர்க்காததால் ஆப்பம் வேக கொஞ்சம் நேரம் எடுக்கும்.

சர்க்கரை சேர்ப்பதால் ஆப்பத்தின் ஓரம் பழுப்பு நிறத்தில் மாறுவதுடன் மொறுமொறுப்பாகவும்  இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *