‘வெற்றி’ உங்களைத் தேடிவர இதைப்பண்ணுங்கள்..!

வெறும் உயர்ந்த குறிக்கோளை வைத்து மட்டுமே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? அது தவறு, உயர்ந்த குறிக்கோள் மட்டும் ஒருவனை வெற்றிக்கு கொண்டு செல்லாது. அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். Image result for 'வெற்றி'

  1. நீங்கள் , உங்கள் பக்கத்து வீட்டு நண்பர் முதல் பக்கத்துத் தெரு கடைக்காரர் ,நண்பர் வரை அனைவரிடமும் ஒரு நல்ல தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களிடமிருந்து  உதவிகள் கிடைப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.

2. உங்கள் பலமும் பலவீனமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும்,             உங்களுடைய பெஸ்ட்டை எப்போதுமே கொடுங்கள்.

  • திட்டமிட்டு செய்யுங்கள் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தையும் .
  • ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் அன்று இரவு ஒரு புத்தகத்திலோ அல்லது நமது நினைவில் கொண்டுவாருங்கள்.
  • எதையும் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில் எவ்ளோ பெரிய பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்தாலும் உங்கள் துணிச்சல்தான் உங்கள் வெற்றிக்கு ஆணிவேர்.
  • எந்தப் பணியிலும் உங்கள் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்களுடைய பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. கூடவே, நிறைய சவால்களும் காத்திருக்கும். இந்த சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

Image result for 'வெற்றி'நீங்கள் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும்.அதை சரியாக செய்யுங்கள்.

உங்களுடைய பணிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவேளை விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவேளையையும் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். இடைவேளைக்கப்புறம் சுறுசுறுப்பாகப் பணிகளைத் தொடர வேண்டும்.

அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள், தாமதமாக எழுந்ததாக சரித்திரம் கிடையாது.

நல்ல நல்ல விஷயங்களை புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலை, அறிவியல், இலக்கியம், உணவு என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் தோளைத் தொற்றிக் கொள்ளும்.

Image result for 'வெற்றி'புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். புதிய ஊரும், அங்குள்ள கலாச்சாரமும், அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறையும் உங்களையும் உங்கள் மனத்தையும் சுறுசுறுப்பாக மாற்றும். உங்கள் வெற்றிக்கும் வழி வகுக்கும்.

வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!

ஒரு வெற்றிகரமான மனிதன், தன் வாழ்க்கையில் நிறையத் தியாகங்களைக் கண்டிப்பாகச் செய்திருப்பான். எனவே, எதையும் விட்டுக் கொடுப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள். வெற்றிக் கனிகளை நீங்கள் சுவைக்கலாம்!

நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *