கோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது.

பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.   கோயமுத்தூரில் உள்ள சுற்றுலா தலங்களைக்  காண்போம்…

கோயம்புத்தூர் :

 1. ஆனைமலை விலங்குகள் சரணாலயம்
 2. அவினாசி கோயில்
 3. ஈச்சனாரி விநாயகர் கோயில்
 4. காரமடை ரெங்கநாதர் கோயில்
 5. குழந்தை ஏசு தேவாலயம்
 6. கோட்டை மேடு மசூதி
 7. மருதமலைக் கோயில்
 8. பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
 9. மாசாணியம்மன் கோயில்
 10. கொங்கு நாட்டு திருப்பதி
 11. வைதேகி அருவி
 12. தியானலிங்கம்
 13. பொள்ளாச்சி
 14. பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு
 15. திருப்பூர்
 16. சிறுவாணி அருவி
 17. திருப்பூர் குமரன் நினைவாலயம்
 18. டாப்ஸ்லிப்
 19. திருமூர்த்தி கோயில்
 20. முதலைப்பண்ணை
 21. வால்பாறை
 22. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்
 23. உடுமலை நாராயணகவி நினைவிடம்
 24. ஜி.டி. நாயுடு தொழில்துறைக் கண்காட்சி
 25. ஆழியாறு அறிவுத் திருக்கோயில்

மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம். சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலை. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர். கொங்குநாடு சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கி.பி. 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் வந்தது. அதன்பின் பொறுப்புக்கு வந்த கோவன்புத்தூர் என்னும் சிற்றரசன் காடு மலிந்திருந்த இவ்வூரை திருத்தி அழகிய நகராகச் செம்மைப்படுத்தினான். அவன் பெயரிலேயே கோயம்புத்தூர் என்று மக்கள் அன்போடு அழைத்ததாக ஒரு வரலாறு உண்டு. முதன் முதல் இந்நகரத்திற்கு கி.பி. 1888 இல் தான் ஒரே ஒரு துணி ஆலை வந்தது. இன்று எங்கு நோக்கினும் ஆலைகள். கோயம்புத்தூர் சுருக்கமாக கோவை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள்..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது.

பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.  இப்பொது சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி காண்போம்.

சென்னை :

 1. கடற்கரை
 2. அண்ணாநகர் கோபுரம்
 3. பிர்லா கோளரங்கம்
 4. அமீர் மகால்
 5. கன்னிமாரா பொது நூலகம்
 6. புனித ஜார்ஜ் கோட்டை
 7. கோட்டை கொடிமரம்
 8. உயர் நீதிமன்றம்
 9. சென்னைப் பல்கலைக் கழகம்
 10. கலா சேத்ரா
 11. கலங்கரை விளக்கம்
 12. போர் வெற்றி நினைவுச் சின்னம்
 13. நேப்பியர் பாலம்
 14. வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை
 15. ராஜாஜி மண்டபம்
 16. ரிப்பன் மாளிகை
 17. பிரம்மஞான சபை
 18. சுற்றுலாத் துறை வளாகம்
 19. டைடல் பூங்கா
 20. நினைவிடங்கள்
 21. கிண்டி சிறுவர் பூங்கா
 22. பாம்புப் பண்ணை
 23. அரசு கவின் கலைக்கல்லூரி
 24. லலித்கலா அகாடெமி
 25. அருங்காட்சியகம்
 26. தேசிய கலைக் கூடம்
 27. கோவில்கள்
 28. தேவாலயங்கள்
 29. மசூதிகள்
 30. புத்த விஹார்
 31. குருத்வாரா
 32. தர்கா
 33. மகான் சாந்திநாத் சமணக் கோயில்
 34. ஜெயின் மந்திர்
 35. கோ கார்டிங்
 36. திறந்தவெளி திரையரங்கம்
 37. கோயம்பேடு பிளானட்யும்
 38. குதிரை சவாரி

அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்..! ஒரு பார்வை..!

 • சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்கள்: பிர்லா கோளரங்கம், அமீர் மகால், அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா பொது நூலகம், எலியட்ஸ் கடற்கரை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னைப் பல்கலைக் கழகம், கலா சேத்ரா, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா – வண்டலூர், முட்டுக்காடு படகுக்குழாம், சென்னைச் சங்கமம், சென்னை அறிவியல் விழா, அரசு அருங்காட்சியகம் சென்னை
 • மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்கள்: மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, இராஜாஜி பூங்கா, அரசு அருங்காட்சியகம்.
 • தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் மகாமகம் திருநாள், இராஜராஜன் மணி மண்டபம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை ஓவியங்கள், தஞ்சாவூர் அரண்மனை, கும்பகோணம், தமிழ்ப் பல்கலைக் கழகம்.
 • நீலகிரி: அவலஞ்சி, தாவரவியல் பூங்கா, கெய்ரன் ஹில்ஸ், தொட்டபெட்டா, கிளமார்கள், கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி, உதகை ஏரி படகு இல்லம், வெஸ்ட்டர்ன் கேட்ச்மென்ட், லேடி கானிங் சீட், முக்குர்தி நேஷனல் பார்க்.
 • கொடைக்கானல் : கரடிச் சோலை அருவி, பேரிஜம் ஏரிக்காட்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, டால்மென் வட்டம், கோக்கர்ஸ் வாக், ஃபேரி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, கால்ஃப் கிளப், கூக்கால் குகைகள், குறிஞ்சியாண்டவர் கோயில்

Related imageஇரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை

 • கன்னியாகுமரி: காந்தி நினைவாலயம், அரசு அருங்காட்சியகம், முட்டம், பத்மநாபபுரம் அரண்மனை, சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம், உதயகிரிக் கோட்டை
 • கோவை : ஆனைமலை விலங்குகள் சரணாலயம், மருதமலைக் கோயில், பொள்ளாச்சி, பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு, டாப்ஸ்லிப், ஜி.டி. நாயுடு தொழில்துறைக் கண்காட்சி.
 • இராமேஸ்வரம் : இராமநாத சுவாமி கோயில், கடல் மீன் காட்சியகம், தனுஷ்கோடி
 • ஏற்காடு : தாவரவியல் பூங்கா, படகு குழாம், பகோடா பாயிண்ட், லேடிஸ் சீட், சேர்வராயன் காவேரியம்மன் கோயில்
 • காரைக்குடி செட்டி நாடு மாளிகை, பிள்ளையார்பட்டி
 • குற்றாலம் அருவிகள் : பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி.
 • ஒகேனக்கல் : ஒகேனக்கல் அருவி
 • சிறுவாணி நீர் வீழ்ச்சி
 • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
 • அணைகள்: மேட்டூர், பரம்பிக்குளம் – ஆழியார், சிறுவானி அணை, பில்லூர் அணை
 • தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்)
 • வனவியல் கல்லூரி அருங்காட்சியகம்.

Image result for தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்..! ஒரு பார்வை..!தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

 1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா [டாப்ஸ்லிப்],பொள்ளாச்சி
 2. முதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி
 3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
 4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
 5. கிண்டி தேசியப் பூங்கா
 6. ஆனைமலை வன விலங்குகள் சரணாலயம்.

Image result for தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள்..! ஒரு பார்வை..!நீர்விழ்ச்சி :

குற்றாலம்

Image result for தமிழ்நாட்டில் குற்றாலம்குற்றாலம் மெயின் அருவியின் தோற்றம் , இது தெற்கு ஆசியாவின் ‘ஸ்பா’ என்றழைக்கப்படுகிறது

குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 167அடியில் அமைந்திருக்கிறது. இங்கு ஒன்பதுக்கும் மேற்ப்பட்ட அருவிகள் உள்ளது.

ஒகேனக்கல் நீர்விழ்ச்சி :

ஒகேனக்கல் அருவிஆசியாவின் நயாகரா அருவிஎன்றழைக்கப்படுகிறது

ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லைக்கருகே உள்ளது.

கேத்தரீன் நீர்விழ்ச்சி :

டால்பின் மூக்கிலிருந்து, குன்னூர் அருகிலுள்ள கேத்தரீன் நீர்விழ்ச்சியின் தோற்றம்

இது நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் அமைந்திருக்கிறது.

சுருளி நீர்விழ்ச்சி :

Image result for சுருளி நீர்விழ்ச்சிசுருளி அருவி தேனி மாவட்டத்தில் மேகமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.

திற்பரப்பு நீர்விழ்ச்சி :

திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

கிள்ளியூர் நீர்விழ்ச்சி :

இது கிழக்கு மலைத்தொடரிலுள்ள சேர்வராயன் மலையில் ஏற்காட்டில் அமைந்திருக்கிறது.

 

தமிழ்நாட்டில் சுற்றுலா இடங்கள்..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40 550 382 சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் 39214721 உள்ளூர் பயணிகள் 1335661 வெளியூர் பயணிகள்.

Image result for சுற்றுலா (tourism) என்றால் என்ன..?பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.

Image result for சுற்றுலா (tourism) என்றால் என்ன..?தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும்.

உலகப் பாரம்பரியக் களங்கள் – தமிழ்நாடு :

நீலகிரி மலை இரயில்

தமிழ்நாட்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரியக் களங்கள் உண்டு. மூன்று சோழர் கோயில்களையும் ஒரு தொகுதியாக வகைப்படுத்தப்படுவதுண்டு.

 • மாமல்லபுரம்
 • அழியாத சோழர் பெருங்கோயில்கள்
 • தஞ்சைப் பெருவுடையார் கோயில்
 • கங்கைகொண்ட சோழபுரம்
 • ஐராவதேஸ்வரர் கோயில்
 • நீலகிரி மலை இரயில் பாதை

 

சுற்றுலா (tourism) என்றால் என்ன..?

சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது “வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது”.

Image result for சுற்றுலா (tourism)உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை. 2010-இல், 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2009-ஐக் காட்டிலும் 6.6% வளர்ச்சியினை காட்டுகிறது. 2010-இல் உலக சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர் வரவை எட்டியுள்ளது. 2009-இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக உலக சுற்றுலாத்துறை 2008-இன் இரண்டாம் பாதியிலிருந்து 2009-ஆம் ஆண்டின் இறுதிவரை சரிவைக் கண்டது. 2009-இல் உலகை உலுக்கிய பறவைக் காய்ச்சல் சர்வதேச சுற்றுபயணிகளின் வருகையை 2009-ஐக் காட்டிலும் 4.2% குறைத்தது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக விளங்குகிறது. சுற்றுலாத்துறை போக்குவரத்து உணவுத்துறை, இடவசதி, ஒய்வு மற்றும் கேளிக்கை மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்துள்ளது.

Image result for சுற்றுலா (tourism)தமிழர் பயண வரலாறு :

போக்குவரத்து, தொலைதொடர்பு, விருந்தோம்பல் துறைகள் பழங்காலத்தில் விரிபு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்வை வாழ்ந்தனர். இருப்பினும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் பிற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு பெற்றனர். சோழ மன்னர்கள் இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் படையெடுத்த போது பலர் அங்கு சென்றனர். குறிப்பிடத்தக்கோர் அங்கேயே இருந்துவிட்டனர். தமிழ் வணிகர்கள் பல இடங்களுக்கு பழங்காலம் முதலே சென்று வந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளில் கிடைக்கிறது. சமய தலங்களை வணங்குவதற்கும், தமது சமயத்தைப் பரப்புவதற்கும் தமிழர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

வணிக விருந்தோம்பல் விரிபு பெற முன்னர் உணவுக்காவும், உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணர்கள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது.

செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பல வற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உலகச் சுற்றுலாப் புள்ளிவிபரங்கள் :

உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கைகேற்ப முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.

தரவரிசை நாடு உலக
சுற்றுலாத்துறைப்
பிரதேசம்
சர்வதேச
சுற்றுலா பயணிகளின்
வருகைகள்
(2012)
சர்வதேச
சுற்றுலா பயணிகளின்
வருகைகள்
(2011)
மாற்றம்
(2011 முதல்
2012வரை)
மாற்றம்
(2010 முதல்
2011வரை)
1  பிரான்ஸ் ஐரோப்பா 83.0 மில்லியன் 81.6 மில்லியன் +1.8% +5.0%
2  அமெரிக்கா வட அமெரிக்கா 67.0 மில்லியன் 62.7 மில்லியன் +6.8% +4.9%
3  சீனா ஆசியா 57.7 மில்லியன் 57.6 மில்லியன் +0.3% +3.4%
4  எசுப்பானியா ஐரோப்பா 57.7 மில்லியன் 56.2 மில்லியன் +2.7% +6.6%
5  இத்தாலி ஐரோப்பா 46.4 மில்லியன் 46.1 மில்லியன் +0.5% +5.7%
6  துருக்கி ஐரோப்பா 35.7 மில்லியன் 34.7 மில்லியன் +3.0% +10.5%
7  செருமனி ஐரோப்பா 30.4 மில்லியன் 28.4 மில்லியன் +7.3% +5.5%
8  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா 29.3 மில்லியன் 29.3 மில்லியன் -0.1% +3.6%
9  உருசியா ஐரோப்பா 25.7 மில்லியன் 22.7 மில்லியன் +13.4% +11.9%
10  மலேசியா ஆசியா 25.0 மில்லியன் 24.7 மில்லியன் +1.3% +0.6%