வெங்காயத்தை, தேனில் ஊறவைத்து சாப்பிட கிடைக்கும் பலன்கள்..!

வெங்காயத்தை, தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிடுவதாலும் , அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதாலும் , உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி காண்போம்.

வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வெங்காயத்துடன் தேன் சேர்க்கும் போது அதன் மருத்துவப்பயன்கள் கூடுகிறது.

தேவையான பொருட்கள்

 • வெங்காயம் – அரை கிலோ
 • தேன் – அரை லிட்டர்

செய்முறை

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சிறிய சைஸ் வெங்காயமாக இருந்தால் அப்படியே முழுசாகவும் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள்.

ஒரு பவுல் / கப்-ல் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தேன் சிரப்பை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,

காய்ச்சலை போக்கும்.

தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.

சளி தொல்லை நீங்கும்.

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்

இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும்.

செரிமானத்தை ஊக்கவிக்கும்.

உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் – தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.

இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 – 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.

சுவையானது! மற்ற காய்ச்சல், சளி மருந்துகளை போன்று இது கசப்பானது அல்லது. தேன் இந்த சிரப்பின் சுவையை சீராக வைத்துக் கொல்வதால், சிறு குழந்தைகள் கூட விரும்பு சாப்பிடுவார்கள். மேலும், ஆரோக்கியம் மேம்படும், காய்ச்சல் சளி விரைவில் குணமாகும்.

குறிப்பு

ஒருவேளை ஒரு இரவு முழுதும் காத்திருக்க முடியாது, அவசரமாக தேவை என்றால், இளங்கொதி நிலையில் 5 – 10 நிமிடங்கள் சூடு செய்து, அதை ஆறவைத்து, உறங்க செல்லும் முன் குடிக்கலாம். காலையில் சற்று ரிலாக்ஸாக உணர இது உதவும்.

செய்துபாருங்கள் ..! கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக ..!

 •  காபி வாசனை தூக்கலாக  இருக்க , காபி டிகாக் ஷன் போட்ட உடன் அதை அப்படியே எடுத்து காபி கலக்காமல், அந்த டிகாக் ஷனை சுட வைத்து பின் காபியில் கலந்தால்போதும் ..
 • அரைப்படி மாவில் செய்த இடியாப்பத்துக்கு, 1 கப் துவரம்பருப்பு, 10 காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து அரைத்து தாளித்த தூளை சேர்த்து வதக்கினால் உசிலி இடியாப்பம் ரெடியாகி விடும்.

 

 • மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.

 

 •  பச்சரிசி தோசைக்கு ஓம இலையை சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் கூடும்.

 

 • கார்ன்ஃப்ளேக்ஸை உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் அருமையாக இருக்கும்.
 • அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கார்ன்ஃப்ளேக்ஸ் தூளை மாவுடன் கலந்து விடுங்கள். அடை மாவு கெட்டியாவதுடன், அடை அதிக சுவையுடனும் மிருதுவாகவும் இருக்கும்.
 •  கோதுமை உப்புமா செய்யும் போது கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்த்துப் பின் கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

 

 • ஹோட்டலில் ரவா தோசை மொறுமொறு என்று இருக்கும். வீட்டில் செய்தால் ஒழுங்கான உருவத்தில் வராது. அதற்கு ரவையை நன்றாக வறுத்து அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துப் பின்னர் மற்றப் பொருட்களுடன் கலந்து வார்த்தால் ஹோட்டலில் உள்ளது போல மொறுமொறு தோசை தயார்.
 • பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து, சிறுதுண்டுகளாக்கி, கடுகு தாளித்து காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, வெங்காயம், உப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல், கொத்தமல்லித் தூவினால் பலாக்கொட்டை சுண்டல் தயார்.
 • எலுமிச்சை ரச வண்டல் மீந்து விட்டால், அதில் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி, கொஞ்சம் சோம்பு போட்டுத் தாளித்து செய்தால் சாப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

  * உளுந்து வடை செய்யும் போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.

 • கோதுமை மாவு 1 கப், மைதா மாவு 1/2 கப், வறுத்த உளுத்தம் மாவு 1 டீஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் ருசியாக இருக்கும். வெடிக்காது. எண்ணெய் குடிக்காது.

 

 • சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டுக் கலந்து அரைத்தால், வாசனையும் கூடும். பருப்பினால் உண்டாகும் வாயுவையும் தடுக்கும்.
 • வெங்காய வடகம் செய்யும்போது எலுமிச்சை இலை, நார்த்தை இலை, தூதுவளை, வல்லாரை, துளசி, புதினா போன்ற மூலிகைகளை சேர்த்து செய்தால் சுவையும், மணமும் கூடும்.
 • சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் பழத்துண்டுகள், திராட்சை சேர்த்தால் வித்தியாசமான சுவை கிட்டும்.

 

 • சிறிது எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்து, அதனுடன் தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டையும் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்தால் அருமையான இஞ்சித் துவையல் தயார்.

காய்கறி எப்படி வாங்குவது..!சில டிப்ஸ்..!

விவசாயத்தில் நன்கு  அறிவுடைய நம்  முன்னோருக்கு காய்கறி வாங்குவது என்பது புதிதல்ல   இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்..

எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்…. வாங்குவது எப்படி..?

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்….

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

சத்தான தினை ஆப்பம் செய்து பாருங்கள்..!

Image result for தினை ஆப்பம்தேவையான பொருட்கள் :

 • தினை – 2 கப்
 • இட்லி அரிசி – கால் கப்
 • வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
 • வெந்தயம் – 1 ஸ்பூன்
 • தேங்காய்ப் பூ – 1/2 கப்
 • வடித்த சாதம் – ஒரு கைப்பிடி
 • உப்பு – தேவைக்கு
 • சர்க்கரை – 2 ஸ்பூன்
 • கஞ்சி காய்ச்ச :
 • பச்சரிசி – 2 ஸ்பூன் (தனியே ஊற வைக்கவும்)

 

Image result for தினை ஆப்பம்செய்முறை: 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

தனியே ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியின் சிறிய ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

Image result for தினை ஆப்பம்அத்துடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். (கிளறுவதை நிறுத்தி விட்டால் கட்டி தட்ட ஆரம்பிக்கும்)
சிறிது நேரத்தில் சூடேறியதும் மாவு பசை போன்ற பதத்திற்கு இறுக தொடங்கும். அப்போது அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
சூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து விடவும். உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.

மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

தேவையான மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.
முக்கிய குறிப்புகள் : 

கஞ்சி காய்ச்சி சேர்ப்பதினால் ஆப்பம் சோடா சேர்க்காமலே மெதுவாக வரும்.

சோடா சேர்க்காததால் ஆப்பம் வேக கொஞ்சம் நேரம் எடுக்கும்.

சர்க்கரை சேர்ப்பதால் ஆப்பத்தின் ஓரம் பழுப்பு நிறத்தில் மாறுவதுடன் மொறுமொறுப்பாகவும்  இருக்கும்.

கொத்து பரோட்டா : செய்து பாருங்கள்..!

தூத்துக்குடி பரோட்டா கொத்து பரோட்டாவிற்கு என்று தனியாக ஒரு கூட்டம் உண்டு , பாடர் பரோட்டா, முட்டை மசால் பரோட்டோ, விருதுநகர் பரோட்டா, முனியாண்டி விலாஸ் பரோட்டா என ஏகப்பட்ட வெரைட்டிகள் சொல்லிக் கொண்டே போகலாம். துண்டுகளாக்கப்பட்ட பரோட்டா உடன் மசாலா, முட்டை  சேர்த்து தயாரிப்பது கொத்து பரோட்டா. அந்த மசாலா என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம். முட்டை தொடங்கி சிக்கன், மட்டன், வாத்துக்கறி, காடை என உங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சேர்த்து பரோட்டா மாஸ்டர்கள் அவர்களில் ஸ்டைலில் வாழை இலையில் பரிமாறுவார்கள்.

Image result for முட்டை கொத்து பரோட்டாகொத்து பரோட்டா இண்ட்ரோ ஆனது முதலில் மதுரையில் தான். மைதா மாவு உருட்டி, பிசைந்து, தேய்த்து, ரொட்டி போல சுட்டு எடுத்து, முட்டை, அல்லது கறித்துண்டுகளை சேர்த்து, மசாலாப்பொருட்கள், சால்னா எனப்படும் குழம்பு ,கிரேவி  சேர்த்து கொத்தி எடுத்தால் கொத்து பரோட்டா தயார். பரோட்டா பிரியர்கள் பலருக்கும் இறைச்சி சேர்க்கும் கொத்து பரோட்ரோவை விட முட்டை கொத்து பரோட்டா தான் கொள்ளை பிரியம்.

Image result for முட்டை கொத்து பரோட்டாமுட்டை கொத்து பரோட்டா:

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு
2. வெங்காயம்
3. பச்சை மிளகாய்
4.தக்காளி
5.மஞ்சள்தூள்
6.கருவேப்பிலை
7.கரம் மசாலா
8.தனியா தூள்
9.சீரகத்தூள்
10.மிளகாய்த்தூள்
12.மட்டன் அல்லது சிக்கன் குழம்பு
13.எண்ணெய்
14. முட்டை

Image result for முட்டை கொத்து பரோட்டாசெய்முறை:

1. முதலில் மைதா மாவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, அதை வட்டமாக தட்டி பரொட்டோ போல் சுட்டு எடுக்க வேண்டும்.

2. பின்பு, தவாவில் எண்ணெய் ஊற்றி அதில், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,மிளகுத்தூள், தனியா தூள், சீரகத்தூள், தக்காளியைச் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.

4. இப்போது பரோட்டோவை எடுத்து தனித்தனியாக பிய்த்து கொண்டு அதில் சேர்க்க வேண்டும்.

5. அதனுடன், மட்டன்குழம்பு அல்லது சிக்கன் சால்னாவை ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.

6. பின்பு, தேவையான முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும். இறுதியில் இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்தவும்.

7. அதன் மேல் எண்ணெய்யை தூவி பதமாக கொத்தி, இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுடச்சுட கொத்து பரோட்டா தயார்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாழைப் பழ அப்பம்..!

தேவையான பொருட்கள் : 

 • வாழைப்பழம் – ஒன்று (பெரிதாக)
 • மைதா – ஒரு கப்
 • அரிசி மாவு – ஒரு கப்
 • தூளாக்கிய வெல்லம் – ஒரு கப்
 • தேங்காய் துருவல் – 1/2 கப்
 • ஏலக்காய் – 2
 • சோடா உப்பு – ஒரு சிட்டிகை
 • எண்ணெய் – பொரிப்பதற்கு

Image result for வாழைப் பழ அப்பம்செய்முறை :

ஒரு சிறிய பாத்திரத்தில் தூள் வெல்லத்தை போட்டு நன்றாக முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.வெல்லம் நன்றாக கரைந்த பின்பு அதாவது நன்றாக பதத்திற்கு வரும்வரை சூடாக்க வேண்டும் .

மற்றொரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, சோடா உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து கொள்ளவும்.

ஏலக்காயை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.

வாழைப்பழத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் வெல்ல பாகையும் வடிக்கட்டி ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கட்டித் தட்டாமல் கலந்துக்கொள்ளவும்.

இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், ஒரு ஸ்பூன் நிறைய மாவு எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றவும்.

இதேப்போல் நான்கு, ஐந்து ஊற்றி விடவும். அடி சிவந்து மேலெழும்பும் போது திருப்பி போட்டு நன்கு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.