தமிழிலிருந்துதான் ஆங்கிலம் வந்தது, உலகின் தாய்மொழி தான் என நிரூபிக்கப்பட்டது, ஆதாரம் இதோ..!

தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்..!

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!

ஆதாரம் இதோ…

Image result for The Etymological dictionary of the English languageW.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :

Image result for தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்.Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay – களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

Blare – ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.

Culture – கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

Image result for தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்.இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், ஜெர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” – ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

Related imageThe mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..

Image result for தமிழ் : அவமானம் அல்ல அடையாளம்.உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் “கொ ” வரும் இடத்தில் ” K ” ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

” பொத்தல் ” ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

Related imageஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .

Image result for தமிழ் images2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )

– சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
– இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

Image result for தமிழ்இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

Image result for தமிழ்” ழ ” உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

Image result for தமிழ்இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .

தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .Related image

இன்றைய பேஷன் : முற்றிலும் பெண்களுக்காக..!

இன்றைய பேஷன் உலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன.குறிப்பாக இளம்வயது ஆண்கள்/பெண்கள் மத்தியில் பேஷன் புதிய வரலாறு படைத்தது.

மேல்நாட்டுக் கலாச்சாரமான ஜீன்ஸ் பாண்ட் மற்றும் டீ ஷர்ட் போன்றவை இப்போது இந்தியாவிலும் பரவியது.

பொதுவாக மக்களிடையே குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக நகைகள் மீது மோகம் அதிகம்தான். எங்கு சென்றாலும் யாரைப்பார்த்தாலும் நகை தன.செயின், மோதிரம்,கம்மல், ஒட்டியாணம்,என்று பல உள்ளன.

பெண்கள் நகைக்கடைக்கு சென்றால் அவ்வளவு தன.ஆண்களின் பார்ஸ்க்கு ஆப்பு ரெடி என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான்.

பெண்களை நகை விஷயத்தில் திருப்தி படுத்துவது என்பது முடியாத காரியம்.

பேஷன் உலகம் : உங்களுக்காக…!

இன்றைய பேஷன் உலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன.குறிப்பாக இளம்வயது ஆண்கள்/பெண்கள் மத்தியில் பேஷன் புதிய வரலாறு படைத்தது.

மேல்நாட்டுக் கலாச்சாரமான ஜீன்ஸ் பாண்ட் மற்றும் டீ ஷர்ட் போன்றவை இப்போது இந்தியாவிலும் பரவியது.அது பற்றிய சில தகவல்கள் நமது தளத்தில் அடுத்தடுத்த பதிப்பில் வெளிவரும்.

 

 

கோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது.

பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.   கோயமுத்தூரில் உள்ள சுற்றுலா தலங்களைக்  காண்போம்…

கோயம்புத்தூர் :

 1. ஆனைமலை விலங்குகள் சரணாலயம்
 2. அவினாசி கோயில்
 3. ஈச்சனாரி விநாயகர் கோயில்
 4. காரமடை ரெங்கநாதர் கோயில்
 5. குழந்தை ஏசு தேவாலயம்
 6. கோட்டை மேடு மசூதி
 7. மருதமலைக் கோயில்
 8. பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
 9. மாசாணியம்மன் கோயில்
 10. கொங்கு நாட்டு திருப்பதி
 11. வைதேகி அருவி
 12. தியானலிங்கம்
 13. பொள்ளாச்சி
 14. பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு
 15. திருப்பூர்
 16. சிறுவாணி அருவி
 17. திருப்பூர் குமரன் நினைவாலயம்
 18. டாப்ஸ்லிப்
 19. திருமூர்த்தி கோயில்
 20. முதலைப்பண்ணை
 21. வால்பாறை
 22. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்
 23. உடுமலை நாராயணகவி நினைவிடம்
 24. ஜி.டி. நாயுடு தொழில்துறைக் கண்காட்சி
 25. ஆழியாறு அறிவுத் திருக்கோயில்

மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம். சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலை. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர். கொங்குநாடு சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கி.பி. 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் வந்தது. அதன்பின் பொறுப்புக்கு வந்த கோவன்புத்தூர் என்னும் சிற்றரசன் காடு மலிந்திருந்த இவ்வூரை திருத்தி அழகிய நகராகச் செம்மைப்படுத்தினான். அவன் பெயரிலேயே கோயம்புத்தூர் என்று மக்கள் அன்போடு அழைத்ததாக ஒரு வரலாறு உண்டு. முதன் முதல் இந்நகரத்திற்கு கி.பி. 1888 இல் தான் ஒரே ஒரு துணி ஆலை வந்தது. இன்று எங்கு நோக்கினும் ஆலைகள். கோயம்புத்தூர் சுருக்கமாக கோவை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள்..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது.

பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.  இப்பொது சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி காண்போம்.

சென்னை :

 1. கடற்கரை
 2. அண்ணாநகர் கோபுரம்
 3. பிர்லா கோளரங்கம்
 4. அமீர் மகால்
 5. கன்னிமாரா பொது நூலகம்
 6. புனித ஜார்ஜ் கோட்டை
 7. கோட்டை கொடிமரம்
 8. உயர் நீதிமன்றம்
 9. சென்னைப் பல்கலைக் கழகம்
 10. கலா சேத்ரா
 11. கலங்கரை விளக்கம்
 12. போர் வெற்றி நினைவுச் சின்னம்
 13. நேப்பியர் பாலம்
 14. வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை
 15. ராஜாஜி மண்டபம்
 16. ரிப்பன் மாளிகை
 17. பிரம்மஞான சபை
 18. சுற்றுலாத் துறை வளாகம்
 19. டைடல் பூங்கா
 20. நினைவிடங்கள்
 21. கிண்டி சிறுவர் பூங்கா
 22. பாம்புப் பண்ணை
 23. அரசு கவின் கலைக்கல்லூரி
 24. லலித்கலா அகாடெமி
 25. அருங்காட்சியகம்
 26. தேசிய கலைக் கூடம்
 27. கோவில்கள்
 28. தேவாலயங்கள்
 29. மசூதிகள்
 30. புத்த விஹார்
 31. குருத்வாரா
 32. தர்கா
 33. மகான் சாந்திநாத் சமணக் கோயில்
 34. ஜெயின் மந்திர்
 35. கோ கார்டிங்
 36. திறந்தவெளி திரையரங்கம்
 37. கோயம்பேடு பிளானட்யும்
 38. குதிரை சவாரி

அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.

வெங்காயத்தை, தேனில் ஊறவைத்து சாப்பிட கிடைக்கும் பலன்கள்..!

வெங்காயத்தை, தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிடுவதாலும் , அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதாலும் , உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி காண்போம்.

வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வெங்காயத்துடன் தேன் சேர்க்கும் போது அதன் மருத்துவப்பயன்கள் கூடுகிறது.

தேவையான பொருட்கள்

 • வெங்காயம் – அரை கிலோ
 • தேன் – அரை லிட்டர்

செய்முறை

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சிறிய சைஸ் வெங்காயமாக இருந்தால் அப்படியே முழுசாகவும் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள்.

ஒரு பவுல் / கப்-ல் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தேன் சிரப்பை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,

காய்ச்சலை போக்கும்.

தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.

சளி தொல்லை நீங்கும்.

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்

இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும்.

செரிமானத்தை ஊக்கவிக்கும்.

உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் – தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.

இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 – 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.

சுவையானது! மற்ற காய்ச்சல், சளி மருந்துகளை போன்று இது கசப்பானது அல்லது. தேன் இந்த சிரப்பின் சுவையை சீராக வைத்துக் கொல்வதால், சிறு குழந்தைகள் கூட விரும்பு சாப்பிடுவார்கள். மேலும், ஆரோக்கியம் மேம்படும், காய்ச்சல் சளி விரைவில் குணமாகும்.

குறிப்பு

ஒருவேளை ஒரு இரவு முழுதும் காத்திருக்க முடியாது, அவசரமாக தேவை என்றால், இளங்கொதி நிலையில் 5 – 10 நிமிடங்கள் சூடு செய்து, அதை ஆறவைத்து, உறங்க செல்லும் முன் குடிக்கலாம். காலையில் சற்று ரிலாக்ஸாக உணர இது உதவும்.

செய்துபாருங்கள் ..! கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக ..!

 •  காபி வாசனை தூக்கலாக  இருக்க , காபி டிகாக் ஷன் போட்ட உடன் அதை அப்படியே எடுத்து காபி கலக்காமல், அந்த டிகாக் ஷனை சுட வைத்து பின் காபியில் கலந்தால்போதும் ..
 • அரைப்படி மாவில் செய்த இடியாப்பத்துக்கு, 1 கப் துவரம்பருப்பு, 10 காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து அரைத்து தாளித்த தூளை சேர்த்து வதக்கினால் உசிலி இடியாப்பம் ரெடியாகி விடும்.

 

 • மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.

 

 •  பச்சரிசி தோசைக்கு ஓம இலையை சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் கூடும்.

 

 • கார்ன்ஃப்ளேக்ஸை உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் அருமையாக இருக்கும்.
 • அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கார்ன்ஃப்ளேக்ஸ் தூளை மாவுடன் கலந்து விடுங்கள். அடை மாவு கெட்டியாவதுடன், அடை அதிக சுவையுடனும் மிருதுவாகவும் இருக்கும்.
 •  கோதுமை உப்புமா செய்யும் போது கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்த்துப் பின் கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

 

 • ஹோட்டலில் ரவா தோசை மொறுமொறு என்று இருக்கும். வீட்டில் செய்தால் ஒழுங்கான உருவத்தில் வராது. அதற்கு ரவையை நன்றாக வறுத்து அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துப் பின்னர் மற்றப் பொருட்களுடன் கலந்து வார்த்தால் ஹோட்டலில் உள்ளது போல மொறுமொறு தோசை தயார்.
 • பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து, சிறுதுண்டுகளாக்கி, கடுகு தாளித்து காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, வெங்காயம், உப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல், கொத்தமல்லித் தூவினால் பலாக்கொட்டை சுண்டல் தயார்.
 • எலுமிச்சை ரச வண்டல் மீந்து விட்டால், அதில் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி, கொஞ்சம் சோம்பு போட்டுத் தாளித்து செய்தால் சாப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

  * உளுந்து வடை செய்யும் போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.

 • கோதுமை மாவு 1 கப், மைதா மாவு 1/2 கப், வறுத்த உளுத்தம் மாவு 1 டீஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் ருசியாக இருக்கும். வெடிக்காது. எண்ணெய் குடிக்காது.

 

 • சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டுக் கலந்து அரைத்தால், வாசனையும் கூடும். பருப்பினால் உண்டாகும் வாயுவையும் தடுக்கும்.
 • வெங்காய வடகம் செய்யும்போது எலுமிச்சை இலை, நார்த்தை இலை, தூதுவளை, வல்லாரை, துளசி, புதினா போன்ற மூலிகைகளை சேர்த்து செய்தால் சுவையும், மணமும் கூடும்.
 • சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் பழத்துண்டுகள், திராட்சை சேர்த்தால் வித்தியாசமான சுவை கிட்டும்.

 

 • சிறிது எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்து, அதனுடன் தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டையும் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்தால் அருமையான இஞ்சித் துவையல் தயார்.

காய்கறி எப்படி வாங்குவது..!சில டிப்ஸ்..!

விவசாயத்தில் நன்கு  அறிவுடைய நம்  முன்னோருக்கு காய்கறி வாங்குவது என்பது புதிதல்ல   இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்..

எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்…. வாங்குவது எப்படி..?

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்….

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

முதலிரவில் கணவன் மனைவி எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்..!

திருமணபந்தத்தில் ஈடுபடும் ஆண் / பெண் ,  பின்பு கணவன் , மனைவியாக மாறியா பின்பு அன்று கூடுவதே சாந்திமுகூர்த்தம் அல்லது முதலிரவு எண்டு கூறுவார்கள்.முதலிரவு என்றவுடன் பால் ,பழம் , என நினைப்பது சினிமாவின் மோகம்தான். ஆனால் இப்போதைய Hi-Tech உலகில் அனைவருக்கும் தேய்ந்த விஷயம் தன இந்த முதலிரவு.

பொதுவாக முதலிரவு சமயத்தில் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்றும் அவளைப்பற்றி ஆண் என்ன நினைக்கிறான் என்பது பற்றியும் காண்போம்.

பொதுவாக பெண்களுக்கு முதலிரவு சமயத்தில் அதிகமாக பேசவே விரும்புவார்கள். ஆண்கள் அதற்கு இடம் கொடுக்க வேண்டும்.  பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றால் முதலிரவு சமயத்தில் ஒருவரை ஒருவர் நன்றாக பேசி புரிந்துகொள்ளவே பெண்கள் விரும்புவார்கள்.

திருமணமான அன்று இரவே முதலிரவு என்பதால் அன்றைய நிகழ்ச்சிகள் பற்றியும் தனக்கு பிடித்தது பற்றியும் பேச ஆசைப்படுவார்கள் பெண்கள் . நீங்கள் போனில் எவ்வளவு பேசினாலும் முதலிரவு சமயத்தில் பெண்களுக்கு கூச்சமாகவே இருக்கு. பெண்களுக்கு முழுமையாக தம்,பத்திய வலு முறைகள் தெரிவது இல்லை.ஆகவே அதைப்பற்றி நீங்கள் கூறவேண்டும் .மேலும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் . அதைத்தொடர்ந்து சிறு சிறு விளையாட்டுகள் செய்ய வேண்டும் .இதையே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் இதை மட்டும் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு அன்று உடலுறவு வேண்டாம் என்று கூறினாலோ அல்லது நினைத்தாலோ  நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம் .

முதலிரவு சமயத்தில் பெண்களை மென்மையாக கையாள்வதையே அவர்கள் விரும்புவர்கல்.இவ்வாறு செய்தல் உங்கள் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

எந்த நாள் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பமாக முடியும்..!

புதிதாக திருமணம் ஆனவர்கள் கேட்கும் ஒரு கேள்வி 30  நாட்களில் மாதவிடாய் வருகிறது. எப்போது உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது தான் அந்த கேள்வி. 31வது நாள் மாதவிடாய் வருகிறது என்றால் எப்போது உடலுறவு கோவத்து எப்போது கரு தரிப்பது என்ற குழப்பம் பல பெண்களுக்கு உண்டு.

Image result for எந்த நாள் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பமாக முடியும்..!இதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் . நீங்கள்  மாதவிடாய் நிறத்தை சையாக தெரிந்து வைக்க வேண்டும்.பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சரியாக 20 -32 நாட்களில் வரும்.சில பெண்களுக்கு சற்று சில மாறுபாடுகள் இருக்கும்.

ஒரு பெண் மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்து 14ம் நாள் முடிந்த பிறகு அவர்களது கரு முட்டை வெளிவரும். இந்த முட்டை வெளியேறி 24மணி நேரத்துக்குள்  கரு முட்டையை விந்தணு சந்தித்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறு கிடைக்கும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோணியில் உட்செலுத்தப்பட்டு 72மணி நேரம் உயிரோடு இருக்கும். ஆகா நீங்கள் கருத்தரிக்க வேண்டும் என்றால் சரியாக மாதவிடாய் தொடங்கிய முதல் நாளில் இருந்து சரியாக 11வது  நாள் கழித்து நீங்கள் உடலுறவில் ஈடுபடவேண்டும்.